தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம்  சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைப்பெற்றது. 


 அக்கூட்டத்தில், ‘’ விஜயபாஸ்கர் உள்பட மூன்று அதிமுக அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த குற்றச்சாட்டு மீது இந்த மாதத்துக்குள் சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால்,  தமிழக காங்கிரஸ் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதிமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்களை குறித்து விசாரணை நடக்கவிடாமல் மத்தியில் இருக்கும் பாஜக அரசு பார்த்துக்கொள்கிறது” என்று கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.


தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும், திமுக தலைமையில் புதிய ஆட்சி அமையும். ராகுல் காந்தி, தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை இந்த மாத இறுதியில் தொடங்குகிறார். தேதி விரைவில் அறிவிக்கப்படும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறார். “ என்று தெவிக்கப்பட்டு உள்ளது.