சென்னை அரும்பாக்கத்தில் திருமண ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை, கல்லூரி பேராசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

அப்போது, அதே கல்லூரியில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 26 வயதான லோகேஷ் என்ற இளைஞர், பேராசிரியராக பணியாற்றி வந்தார். 

அப்போது, அந்த 17 வயது மாணவியும், கல்லூரி பேராசிரியர் லோகேசும் முதலில் நட்பாகப் பழகி வந்து உள்ளனர். ஆனால், நாளடைவில் அது அவர்களுக்குள் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. 

இப்படி, கல்லூரி பேராசிரியர் லோகேசும், கல்லூரி மாணவியைக் காதலித்து வந்த நிலையில், அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்து உள்ளது.

அதன்படி, பேராசிரியர் லோகேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது, திட்டம் போட்டு கல்லூரி மாணவியான காதலியை, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று “உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன்” என்று, ஆசை ஆசையான வார்த்தைகள் கூறி, அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இப்படி, அந்த கல்லூரி பேராசிரியர் லோகேஷ், மாணவியுடன் உல்லாசமாக இருந்து விட்டு, தற்போது அந்த மாணவியுடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்திருக்கிறார். ஆனால், அந்த மாணவி செல்போனில் தொடர்பு கொண்டாலும், லோகேஷ் போனை எடுப்பது இல்லை என்றும், கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சந்தேகம் அடைந்த அந்த மாணவி, வில்லிவாக்கம் சென்று விசாரித்து உள்ளார். அப்போது, லோகேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனது தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பேராசிரியர் லோகேஷிடம் வற்புறுத்தி உள்ளார். 

அனால்,  “என் பெற்றோர்கள் பார்த்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன். உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று கூறி லோகேஷ், திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த மாணவி, வேறு வழியின்றி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலித்து உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய கல்லூரி பேராசிரியர் மீது புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி பேராசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம், அந்த மாணவி படிக்கும் கல்லூரி முழுவதும் பரவியது. அத்துடன், கல்லூரியில் பணியாற்றும் சக பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், கோயம்புத்தூர் குனியமுத்தூரைச் சேர்ந்த 19 வயது மாணவிக்கு, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு செல்ஃபோனில் ஆபாசப் படங்கள் அனுப்பிய ஆசிரியரை, காவல் துறையினர் தற்போது கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.