தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலித்து வருபவர் காஜல் அகர்வால்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று தென்னிந்திய மொழிகளில் கலக்கி தனக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் காஜல் அகர்வால்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் காஜல் அகர்வால்.

கடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் இவர் ஹீரோயினாக நடித்த கோமாளி படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2,சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா,பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

இதனை தவிர ஹாட்ஸ்டாருக்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடர் விரைவில் ரிலீஸாகவுள்ளது.இந்த தொடரின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இவரது கல்யாணம் இன்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.அவ்வப்போது புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் காஜல் அகர்வால்.தற்போது 15.7 மில்லியன் ரசிகர்களை பெற்று தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார் காஜல் அகர்வால்.