11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியைக் கடத்திய 21 வயது இளைஞன், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

தற்போது, கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில், அந்த மாணவி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

இப்படியான நிலையில், கடந்த 12 ஆம் தேதி, தனது வீட்டிற்கு வந்த தோழியை மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக, பேருந்து ஏற்றி விட்டு வருவதாகக் கூறிவிட்டு, அந்த மாணவி வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். ஆனால், அதன் பிறகு, வெகு நேரமாகியும் அந்த மாணவி வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், அந்த பகுதியின் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

ஆனால், எங்குத் தேடியும் மாணவி கிடைக்காத நிலையில், பயந்துபோன மாணவியின் பெற்றோர் அங்குள்ள மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அங்குள்ள கங்கனம்புத்தூரை சேர்ந்த 21 வயதான தினேஷ் என்ற இளைஞன், அந்த பள்ளி மாணவியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, தினேஷ் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுப்பிடித்த போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டு, அவருடன் இருந்த தினேஷை அதிரடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

பின்னர், சிறுமியை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அத்துடன், கைது செய்யப்பட்ட தினேஷிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றுக்கொண்ட போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், புதுச்சேரி துறையூர் பகுதியில் கல்லூரி மாணவி காதலனே கொலை செய்து, சாக்குப்பையில் கட்டி சுடுகாட்டில் வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் சந்தைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ என்ற இளம் பெண், சேதராப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். எப்போதும் பேல், இந்த இளம் பெண் நேற்று கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று உள்ளார். அதன் பிறகு, நீண்ட நேரம் ஆகியும் அந்த இளம் பெண் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவிட்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மாயமான அந்த இளம் பெண் ராஜஸ்ரீ, கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து 
வந்ததாகவும், அவர்கள் இருவரும் வெளியே சென்ற போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த காதலன், அந்த இளம் பெண்ணை வெட்டிக்கொலை 
செய்துவிட்டு, சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் காதலனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.