திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தொடர் கதையாக உள்ளது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை எந்த பக்கம் எடுத்தாலும், காஸ்டிங் கவுச் குறித்த புகார்கள் குவிந்து கிடக்கிறது. பட வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களையும் நடிகைகளையும் சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அப்படி பாதிக்கப்பட்ட நடிகைகள் தங்களின் அனுபவங்களை #Metoo என்ற அமைப்பை உருவாக்கி புகார் அளித்து வந்தனர். இந்த மீடூ புகாரின் மூலம் பல பிரபலங்களின் முகத்திரை கிழிந்தது. ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் சிறை தண்டனையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை தன்னுடைய மீடூ அனுபவத்தை பகிர்ந்து ஒட்டு மொத்த திரைத்துறைக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு ராக் ஆன் படத்தின் மூலம் அறிமுகமான பிராச்சி தேசாய் எனும் பாலிவுட் நடிகை பேசியது குறித்த செய்தி தான் இது. சின்னத்திரையில் இருந்து பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார் பிராச்சி தேசாய். அதைத் தொடர்ந்து லைப் பார்ட்னர், தேரி மேரி கஹானி, போலீஸ் ஹேல், ஏக் வில்லன், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பாய், கார்பன் உள்பட பல பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்துள்ளார். 

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிராச்சி தேசாய் தனக்கு ஏற்பட்ட காஸ்டிங் கவுச் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் இயக்குனர் நேரடியாகவே அவரது விருப்பத்துக்கு இணங்கும்படி அழைத்தார். படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நான் அதை மறுத்துவிட்டேன்.

நான் மறுத்த போதும் தொடர்ந்து என்னை அழைத்தார். நான் உங்கள் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறிய போதும் கூட அவர் தொடர்ந்து அழைத்து கொண்டிருந்தார்.

அவருடன் படுக்கைக்கு நான் ஒப்புக்கொண்டு இருந்தால் இன்னும் நிறைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்து இருக்கும். அப்படி நடிக்க தேவை இல்லை. பெரிய படத்தின் இயக்குனர் அழைத்துமே ஒப்புக்கொள்ள வில்லை.

குறைவான படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன் இவ்வாறு பிராச்சி தேசாய் தெரிவித்துள்ளார். பிராச்சி தேசாயின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அந்த இயக்குநர் யார் என கேட்டு வருகின்றனர். மேலும் அவரது துணிச்சலான குணத்தை பாராட்டி வருகின்றனர்.