இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்லிட்ட பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை மனிஷா யாதவ் தனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கிறேன். ஆனால் உடனடியாக தேறிவிடுவேன் என்று நம்பிக்கையாக இருக்கிறேன். இப்போதைக்கு மோசமாக எதுவும் இல்லை. கொஞ்சம் மூச்சுத்திணறல் மட்டும் அவ்வப்போது உள்ளது. ஆனால், இந்த கொரோனாவை மொத்தமாகத் தாண்டி வருவதே சிறந்தது. 

எனவே அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, முகக்கவசம் அணிந்து இருங்கள் என்று மனிஷா யாதவ் பதிவு செய்துள்ளார்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான படம் வழக்கு என் 18/9. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். கல்லூரி காலம் முதலே மாடலாக இருந்து வந்த மனிஷா, 2012-ம் ஆண்டு வழக்கு என் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக கால்பதித்தார்.

இதன் பின்னர் பல தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டும் தலை காட்டினார். வழக்கு என் 18/9 திரைப்படத்திற்கு பின்னர் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லன நயன்தாரா போன்ற உள்ளிட்ட படங்களில் நடித்தார் மனிஷா.

அதன் பிறகு சென்னை 28 பார்ட் 2-வில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். சொப்பன சுந்தரி எனும் அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதன் பின்னர் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தவர், ஒரு குப்பை கதை மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

பொதுவாக நடிகைகள் சிலர் திருமணத்திற்கு பின்னர் நடிப்பது இல்லை. ஆனால் இவரோ திருமணமான அடுத்த ஆண்டே சினிமாவில் நடித்தார். சமூக வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மனிஷா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அவ்வளவு ஏன் திருமணத்திற்கு பின்னர் கூட பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.