ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் ஜுலி. மக்களிடம் கிடைத்த ஆதரவின் மூலம் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஜூலி அடிப்படையில் ஒரு நர்ஸ். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறிய அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. 

இதனால் முழுநேர நடிகையாக மாறிய அவர் நர்ஸ் பணிக்கு குட் பை சொன்னார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வாழ்வின் முக்கிய தருணங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 7 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கும் ஜூலி. அதில் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசன் போட்டியாளர் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அவர் பதிவிட்டிருக்கும் போட்டோவில் பிக்பாஸ் பிரபலம் சோம் சேகர் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இருவரும் 7 வருடங்களுக்கு முன்பே பழக்கமானவர்கள் என்பது தெரிய வருகிறது. தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சோம் சேகர். 

நான்காவது சீசனில் இறுதிச்சுற்று வரை வந்த சோம் சேகர் மூன்றாம் இடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. 

சோம் சேகர் கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அதே போல இவர் கலந்து பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2, சூரரை போற்று போன்ற படங்களில் கூட சைட் ஆர்ட்டிஸ்ட்டாக தலை காண்பித்துள்ளார்.

bigg boss fame som shekar throwback picture with julie goes viral