மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க நினைத்த கப்பல் கேப்டன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பல்வேறு விதமான செக்ஸ் கலாச்சாரங்கள் கொடிக்கட்டி பறக்கின்றன. அதில், கீ செயின் எனப்படும் ஜோடிகளை மாற்றிக்கொள்ளும் பழக்கம், மேலை நாடுகளில் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது இந்தியாவில் மெல்ல எட்டிப்பார்க்கிறது. அதற்கு இந்த வழக்கே ஒரு சாட்சி.

Mumbai woman files

மும்பையில் கப்பல் ஒன்றில் கேப்டனாக பணியாற்றும் ஒருவருக்கு, கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆகி, தற்போது அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 

இந்நிலையில், மதுபோதைக்கு அடிமையான அந்த கப்பல் கேப்டன், வீட்டில் இருக்கும்போதெல்லாம் குடித்துக்கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று, கடுமையான மதுபோதையில் அவர் இருந்துள்ளார். அப்போது, அவரைப் பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்துள்ளார். சிறுது நேரம்அவருடன் பேசிக்கொண்டிருந்த கப்பல் கேப்டன், தனது மனைவியிடம் வந்து, தனது நண்பரை சந்தோசப்படுத்தும் படி வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.

அத்துடன், தனது நண்பருடன் ஒன்றாக சேர்ந்து இன்புற்று இருக்கும்படி, தனது மனைவியை தொடர்ந்து அவர் தொந்தரவு செய்திருக்கிறார். இதற்கு அந்த பெண் மறுப்புத் தெரிவக்கவே, அந்த பெண் தொடர்பான ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன் என்றும், தன்னுடன் பேசிய ஆடியோக்களையும் வெளியிடுவேன் என்றும் மனைவியை மிரட்டியதாக தெரிகிறது.

Mumbai woman files

இதனால், கடும் அதிர்ச்சியடைந்தப் அந்த பெண், காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார். மேலும், தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி ஏ..டி.தியோ முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கின் முழுமையான விபரங்களை கேட்டப்பிறகு, கடும் அதிர்ச்சியடைந்த நீதிபதி, கப்பல் கேப்டனை நீதிமன்றத்திலேயே கண்டித்தார். மேலும், இந்த செயல் ஒழுக்கக்கேடானவை என்று கூறி, கப்பல் கேப்டன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.