பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்து வந்த கோழிப்பண்ணை டாஸ்க் முடிவில் யாரிடம் பணம் அதிகம் இருக்கிறது என பிக் பாஸ் கேட்டார். ஒவ்வொருவராக தங்களிடம் இருக்கும் பணம் பற்றி தெரிவித்தனர். அதில் அதிகபட்சமாக பாலாஜியிடம் நானுறு ரூபாய்க்கும் அதிகம் மேல் இருப்பதாக கூறினார். ரியோ தன்னிடம் எதுவும் இல்லை என கூறி வடிவேலு போல பாக்கெட்டை எடுத்து வெளியே காட்டிவிட்டார். 

அதிக பணம் வைத்திருக்கும் பாலாஜிக்கு ஒரு சூப்பர் பவர் தரப்படும் என்றும், அது என்ன என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என பிக் பாஸ் கூறினார். இந்த வாரம் டாஸ்கில் சிறப்பாக செய்த இருவரை தேர்ந்தெடுத்து சொல்லும்படி பிக் பாஸ் கூறினார். அப்போது அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகியோரின் பெயரை தான் அனைவரும் கூறினர். அதன் பின் வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறியபோது ரம்யாவை அனைவரும் தேர்வு செய்தனர்.

ஈடுபாடு இல்லாத போட்டியாளர்கள் இருவரை தேர்ந்தெடுக்க சொன்னபோது ஷிவானி மற்றும் கேபியின் பெயரை தான் அனைவரும் தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

ஆரி மற்றவர்களை பார்த்து எப்போதும் உங்களுக்கு டைட்டில் ஜெயிக்க தகுதி இல்லை என சொல்கிறார். என் தகுதி என்ன என முடிவு செய்ய இவர் யாரு என கோபத்துடன் பேசினார். ரம்யா மற்றும் அஜித்தும் ஆரியை பற்றி இதே கருத்தை கூறினார். தன் மனைவி மற்றும் மகளை மிஸ் செய்வதாக எமோஷனலாக பேசினார் ஆரி. இதுவரை சிறப்பாக perform செய்து வருகிறார் என பிக் பாஸ் கூறியதும் கண்ணீர் விட்டார். அவர் என்டர்டெயின்மெண்ட் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் அதற்கான நாட்கள் குறைவாகவே இருக்கிறது என பிக் பாஸ் கூறினார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தலைவருக்கான போட்டி நடைபெறுகிறது. இதில் பாலா, அர்ச்சனா மற்றும் ரம்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வலையில் இருந்து பாதுகாப்பாக பையை எடுத்து வரவேண்டும் என்பதே டாஸ்க்கின் விதிமுறை. இதை வேகமாக செய்கிறார் அர்ச்சனா. இறுதியில் அர்ச்சனா ஜெயிப்பது போல் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த வார தலைவராக அர்ச்சனா ஆகிவிட்டால் என்ன பஞ்சாயத்தெல்லாம் வரப்போகுதோ என்று புலம்பி வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.