தஞ்சாவூரில் பெயிண்டிங் வேலை செய்து வரும் ராஜா என்பவருக்கு புவனா என்ற மனைவியும் ஒரு பெண்யும் குழந்தை உள்ள நிலையில், மூன்றாவதாக கடந்த சனிக்கிழமை அன்று இந்த தம்பதியினருக்கு தஞ்சை அரசு மருத்துவனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. 


இன்று பிற்பகலில் மனைவி புவனா கழிவறைக்கு சென்ற போது, வீட்டின் மேல் ஓட்டை பிரித்து எடுத்து உள்ளே சென்ற குரங்குகள், பிறந்து 8 நாட்களேயான இரட்டை குழந்தைகளை தூக்கி சென்றுள்ளது. சத்தம் கேட்டு கழிவறையிலிருந்து வெளியே வந்த புனவா, குழந்தைகளை குரங்கு தூக்கிசெல்வதை பார்த்து கத்தி சத்தம் போடவே, ஒரு குழந்தையை ஓட்டில் போட்டு விட்டு, மறு குழந்தையை வீட்டின் பின்னே உள்ள பெரிய கோட்டை அகழியில் தூக்கி போட்டு விட்டு சென்றுவிட்டது.


வெகுநேரமாக குழந்தையை தேடிய உறவினர்கள், அகழியில் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தஞ்சை மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளில் குரங்குகள் அதிகமாக வந்து தொல்லை கொடுப்பதாக பல முறை மனு அளித்தும், வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.