விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவரின்  பட்டாசு ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இன்று தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது  திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்துக்கு காரணம் பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

vairamuthu
இந்த விபத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, ’மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய் - பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது. அதனினும் பெருந்துயரம் மனித உயிர்களின் விலை சில லட்சங்கள் ஆகிப்போவது’ என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.