இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பிரியாமணி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் கதாநாயகியாகவும் சிறந்த நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். 

இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய திரையுலகில் பல்வேறு மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் பிரியாமணி .

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய்யுடன் நடிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கட்டாயமாக அந்த வாய்ப்பு கிடைத்தால் ஏற்று சிறப்பாக நடிப்பேன் என பதிலளித்த பிரியாமணி, அடுத்ததாக சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களில்  எது உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது? என கேட்ட கேள்விக்கு ஃபர்ஸ்ட்டு செகண்ட்ன்னு இல்ல விஜய் சார் போஸ்டர்ன்னா  பத்தாவது போஸ்டர்னாளும் புடிக்கும்  ஏன்னா அவரு சூப்பர்ப்.... அவருதான் பீஸ்ட்.... என மிகவும் உற்சாகமாக பதிலளித்துள்ளார். 

தளபதி விஜய் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நடிகை பிரியாமணி உற்சாகமாக பதில் அளித்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அடுத்ததாக தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் நாரப்பா படத்தில் தமிழில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.