தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.

இவர்  நடிப்பில் தயாரான பென்குவின்,மிஸ் இந்தியா திரைப்படங்கள் OTT-யில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே,குட் லக் சகி,மகேஷ் பாபுவின் sarkaaru vaari paata உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ரங் தே, குட் லக் சகி உள்ளிட்ட படங்களின் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.கொரோனாவை அடுத்து இவரது ரங் தே படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்தார் கீர்த்தி சுரேஷ்.இந்த படம் மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.கீர்த்தி சுரேஷ்.விரைவில் அண்ணாத்த,sarkaaru vaari paata ஷூட்டிங்கில் கீர்த்தி கலந்துகொள்ளுவார் என்று தெரிகிறது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஏதேனும் ஒரு அப்டேட்டை ரசிகர்களுடன் பகிர்ந்து மகிழ்வார் கீர்த்தி சுரேஷ்.தற்போது கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் தனது புதிய நடன வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்,இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த நடன வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)