கோவை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்: சின்னவேடம்பட்டி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது இளைஞரை, போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ் நாடு - கேரள எல்லை பகுதியிலுள்ள உள்ள அட்டபாடி மட்டத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அந்த சிறுமி, தனது வீட்டில் இருந்து வந்தார்.

அத்துடன், தற்போது தீபாவளி பண்டிகையை யொட்டி கோவை சின்னவேடம் பட்டி பகுதியில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார் அந்த 15 வயது சிறுமி. அங்கு, தனது பெரியம்மா வீட்டில் இருந்த படியே, அந்த 15 வயது சிறுமி ஆன்லைன் மூலம் படித்து வந்து உள்ளார். 

அதே நேரத்தில், சிறுமி அடிக்கடி செல்போனில் ஒரு இளைஞருடன் அடிக்கடி பேசி வந்ததாகத் தெரிகிறது. அப்படி, அந்த சிறுமி ஒரு இளைஞனுடன் பேசுவதைக் கண்ட சிறுமியின் பெரியம்மா, சிறுமியை கண்டித்து உள்ளார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 4 ஆம் தேதி சிறுமி திடீரென்று மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெரியம்மா, அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், சிறுமி ஒரு இளைஞனுடன் செல்போனில் பேசி வந்தது அவருக்கு ஞாபகம் வந்து உள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த சிறுமியின் பெரியம்மா, அங்குள்ள சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். இதில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் தொலைப்பேசி எண்ணை ஆய்வு செய்தனர். அதில், சிறுமி காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சஞ்சீவி என்ற இளைஞருடன், அடிக்கடி போனில் பேசி வந்தது தெரிய வந்தது. 

அதனைத்தொடர்ந்து, சிறுமியின் சொல்போன் எண்ணை போலீசார் ட்ரேக் செய்தனர். அப்போது, மாயமான சிறுமி காட்டுமன்னார் கோவிலில் இருப்பதைக் காவல் துறையினர் உறுதி செய்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மாயமான 15 வயது சிறுமியையும், 22 வயது இளைஞர் சஞ்சீவியையும் மீட்டு போலீசார், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அதன் பின்னர், சிறுமியை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அதன் தொடர்ச்சியாக, சஞ்சீவியிடம் நடத்தப்பட்ட  விசாரணையில், “15 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது” தெரிய வந்தது. 

இதையடுத்து, சிறுமியைக் கடத்திய 22 வயதான சஞ்சீவியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப் படி, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.