ஓரின சேர்க்கையால் மனைவியை பிரிந்த ஆண் டாக்டர் ஒருவர், வட இந்திய இளைஞரை திருமணம் செய்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

வெளிநாடுகளில் இருக்கக்கூடிய மேற்கத்தியக் கலாச்சார முறைகள் இந்தியாவில் பரவத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு, இந்த செய்தி ஒரு சாட்சியாக அமைந்து உள்ளது.

உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கக் கூடிய ஆணும் - பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் முறை என்பது பழமை என்பது போலவும், அந்த பாரம்பரியமான முறையை மீறி பெண்ணும் - பெண்ணும்; ஆணும் - ஆணும் ஒரே பாலினத்தினர் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் தற்போது இந்தியாவில் பரவலாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அப்படிதான், கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

குடகு மாவட்டத்தில் கொடவா சமுகத்தைச் சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று, தனியாக ஒரு கலாச்சாரம், பண்பாடு என்று காலம் காலமாக அந்த சமூக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், அந்த பண்பாட்டுக் கலாச்சாரத்தை மீறும் வகையில் தான், அந்த சமூகத்தைச் சேர்ந்த குடகு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், தன் பாலின திருமணம்; அதாவது, ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டார். இதனால், அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை சேர்ந்த 38 வயதான சரத் பொன்னப்பா என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். இந்த சரத் பொன்னப்பா அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வந்த போது, அங்கேயே இவருக்கு வட இந்தியாவை சேர்ந்த சீக் தருண் சந்தீப் தேசாய் என்ற ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இருவரும் ஆண்கள் என்பதால், இந்த பழக்கம் அவர்கள் இடையே ஓரின சேர்க்கையாக பின் நாட்களில் மாறியிருக்கிறது. இதனால் சரத் பொன்னப்பா, தனது மனைவியை பிரிந்து உள்ளார். 

அத்துடன், ஒரே பாலினத்தை சேர்ந்த அவர்கள் இருவரும், தன் பாலின திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்து இருந்தனர். திட்டமிட்டபடி, கடந்த மாதம் மாதம் 25 ஆம் தேதி சரத் பொன்னப்பா - சீக் தருண் சந்தீப் தேசாயை திருமணம் செய்து கொண்டார். 

குறிப்பாக, மணமக்களுக்கு எப்படி திருமணம் நடைபெறுமோ அதுபோலவே, ஆண்கள் இருவரும் புதிய ஆடைகள் அணிந்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு உள்ளனர். அதாவது, இருவரும் கொடவா சமுதாய மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, நீண்ட வாள், கத்தி, தலைப்பாகை உள்ளிட்டவை அணிந்து கொடவா சமுதாய பாரம்பரிய முறையில் அந்த ஆண்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் தான் இந்த ஓரின சேர்க்கை திருமணம் நடைபெற்று உள்ளது. தற்போது சரத் பொன்னப்பா - சீக் தருண் சந்தீப் தேசாய் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சரத் பொன்னப்பா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அது வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக, குடகு டாக்டரின் திருமணத்திற்கு குடகில் வசித்து வரும் கொடவா சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தங்களை எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, அவர்கள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.