செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா பவானிஷங்கர். மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக என்ட்ரி தந்தார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியுள்ளது.

மேலும் குருதி ஆட்டம், ஓமணப்பெண்ணே, பொம்மாய், ஹாஸ்டல் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார் பிரியா பவானிஷங்கர். ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன், இந்தியன் 2, பத்து தல ஆகிய படங்களும் பிரியா கைவசம் உள்ளது. 

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பிரியா பவானிஷங்கர் அண்மையில் கோல்டன் நிற சேலையில் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். இந்நிலையில் அப்போது எடுத்த ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிரியா பவானி ஷங்கர், நான் என்ன யோசிக்கிறேன் என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் கமெண்ட்டாக பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நகைச்சுவை நடிகரான சதீஷும் பிரியா பவானிஷங்கரின் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சதீஷ் கூட நடிக்க முடியாம போச்சே என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சதீஷ், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதில் கமெண்ட் அளித்த பிரியா, உனக்கென்னப்பா சூப்பரா ஒரு ஹீரோயின் கிடைச்சுடாங்க என்று குறிப்பிட்டுள்ளார்.