“முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏன் தோற்றது” என்று, கேப்டன் தோனி விளக்கம் அளித்து உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரா நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங் ஆர்டரில் சென்னை அணி வலுவாக இருந்த நிலையிலும், சென்னை அணி தோல்வியைத் தழுவியது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி விளக்கம் அளித்து உள்ளார்.

இது குறித்து பேசிய கேப்டன் தோனி, “ஆடு களத்தில், முதலில் பேட்டிங் செய்யும் போது பனிப் பொழிவை மனதில் வைத்துத் தான் விளையாடுகிறோம்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“முன்பு இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், இப்போது இரவு 7.30 மணிக்கே போட்டி தொடங்கி விடுகிறது. இதனால், குறைந்தது முதல் அரைமணி நேரம் பனிப்பொழிவின் தாக்கம் மிக மிக குறைவாக இருந்தது. அந்த சமயத்தில், கிரண்வுட் சற்றே வறண்டு இருக்கும் என்றும், இதனால், தொடக்கத்தில் பேட்டிங் செய்வதற்கு சற்று சிரமமாக இருக்கும் என்றும்” என்றும், அவர் கூறியுள்ளார். 

அத்துடன், “இப்படியான சூழல், முதலில் பந்து வீசும் அணிக்கு சாதகமான அம்சம்” என்றும், தோனி விளக்கம் அளித்து உள்ளார். 

“எங்களது முதல் நாள் இந்த போட்டியில் அப்படியான நிலைமை தான் இருந்தது என்றும், சீரான பனிப்பொழிவுக்கு ஏறக்குறைய 45 - 50 நிமிடங்கள் ஆகி விட்டது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“தொடக்கத்தில் பனிப்பொழிவு இருந்த நிலையில், அதன் பிறகே பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது என்றும், ஆனாலும் எங்களது பேட்ஸ்மேன்கள் தொடக்க கட்ட சரிவை சமாளித்து அடுத்தடுத்து வந்தவர்கள் சிறப்பாக விளையாடி 188 ரன்கள் சேர்த்தனர்” என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும், “தொடர்ச்சியாக பனியின் தாக்கம் இருக்கும் பட்சத்தில், இது போன்ற ஆடுகளங்களில் முதலில் பேட்டிங் செய்யும் அணி நிச்சயம் 200 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆடுவார்கள் என்றும், ஆனால் நான் ஏற்கனவே சொன்னது மாதிரி முதல் அரை மணி நேரம் தான் 

வித்தியாசத்தை ஏற்படுத்தப்போகிறது என்றும், அதனால் முதலில் பேட் செய்யும் போது 15 - 20 ரன்கள் கூடுதலாக எடுப்பது மட்டுமின்றி, எத்திரணியின் தொடக்க விக்கெட்டுகளையும் சீக்கிரம் வீழ்த்த வேண்டியது கட்டாயம்” என்றும், தோனி கருத்து தெரிவித்து உள்ளார். 

“அதே நேரத்தில், சென்னை அணியை பொறுத்த வரையில், பந்து வீச்சாளர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றும், பவுலர்களின் திட்டமிடல் மிகவும் மோசமாக இருந்தது என்றும், எளிதில் பவுண்டரிக்கு விரட்டும் வகையில் சில பந்துகளை அவர்கள் வீசி உள்ளனர்” என்றும், அவர் கவலைத் 
தெரிவித்தார். 

“இதனால், முதல் போட்டியின் தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டு, வரும் ஆட்டங்களில் நிச்சயம் நாங்கள் மிகவும் நன்றாக செயல்பட வேண்டும் என்றும், செயல்படுவோம்” என்றும், தோனி நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னதாக, போட்டிக்கு பிறகு ஆட்ட நாயகன் விருது பெறும்போது பேசிய தவான், “சென்னையின் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைன் ப்ளானை கணித்து ஆடியதாகவும், சென்னை அணி இதைத் தான் கடந்த சீசனிலும் செய்தது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

அதே போல், சென்னை அணியில் முழுநேர ஸ்பின்னரே இல்லாமல் களமிறங்கியது ஒரு காரணம் என்றும், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் விமசர்னம் செய்திருந்தனர். 

இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை, தோல்வியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி, வரும் 16 தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.