“சச்சின் டெண்டல்கரின் மகள் சாராவுடன் காதல்” என்று, தொடர்ச்சியாக கிசுகிசுப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் விளக்கம் அளித்து உள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில், கடந்த 2019 ஆம் ஆண்டு, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகி, அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 378 ரன்களை குவித்தார். அத்துடன், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 ரன்கள் சேர்ந்தார். 

இப்படியாக, கிரிக்கெட் ஒரு பக்கம் இருக்க, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும் - சுப்மன் கில்லும் காதலிப்பதாக வெகுகாலமாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஜ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மூத்த மகளான 22 வயதான சாரா டெண்டுல்கர், லண்டனில் படித்தவர் ஆவர்.

இந்த நிலையில் தான், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் கே.கே.ஆர். அணியின் தொடக்க வீரருமான ஷுப்மன் கில்லை காதலிக்கிறார் என்ற செய்திகள் இணையத்தில் கடந்த சில மாதங்களாகவே தெரிக்கவிடப்பட்டு வருகிறது. 

இந்த கிசுகிசுக்கு வித்திட்டதே, சாரா டெண்டுல்கரின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தான். 

அதாவது, கடந்த ஐபிஎல் சீசனின் போது, அபுதாபியில் கே.கே.ஆர். அணிக்கு - மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான போட்டியின் போது, ஷுப்மன் கில் டைவ் அடித்து செய்த ஃபீல்டிங்கை டிவியில் ஃபோட்டோ எடுத்து, அந்த ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா டெண்டுல்கர், பதிவிட்டு அவற்றுடன் சில ஹார்ட்டுகளையும் பறக்க விட்டிருந்தார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவும், அதில் இருந்த ஹார்டின்களுமே இவர்களது கிசுகிசுகளுக்கு காரணமாக அமைந்து போனது.

அதன் தொடர்ச்சியாக, இந்த கிசுகிசுக்களை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் இருவரும் தங்களுடைய சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும்போது, ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

குறிப்பாக, சாரா டெண்டுல்கர், தனது புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, "I Spy" என பதிவிட்டிருந்தார். அதே போலவே, ஷுப்மன் கில்லும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, அதே தலைப்பை கொடுத்து எமோஜியும் கூடவே போட்டிருந்தார். இதனையெல்லாம் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள், “சாராவும் - கில்லும் காதலிப்பதாக” கூறி வருகின்றனர். 

இதனால், பல கிரிக்கெட் ரசிகர்கள், அதிர்ச்சியில் தங்களது தூக்கத்தைத் தொலைத்துத் தேடினார்கள்.

இந்த நிலையில், இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ள இளம் வீரர் சுப்மன் கில், “நான் இப்போதும் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னை போன்று ஒரு க்ளோனிங் நபரை உருவாக்கும் எண்ணம் எதிர்காலத்தில் இல்லை” என்று, மிகவும் நகைச்சுவையாகப் பதில் அளித்து உள்ளார்.

இதன் மூலமாக, “சச்சின் மகள் சாராவை சுப்மன் கில் காதலிக்கவில்லை” என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.