சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் கார்த்திக் சுப்பராஜ் பீட்சா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த கார்த்திக் சுப்பராஜ் தொடர்ந்து இறைவி,மெர்குரி என வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ்  பேட்ட திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.தான் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகர் என்பதை பேட்ட திரைப்படத்தின் மூலம் நிரூபித்தார் கார்த்திக் சுப்பராஜ்.

அதனைத் தொடர்ந்து தற்போது தனுஷுடன்  ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இணைந்தார் கார்த்திக் சுப்பராஜ். வருகிற ஜூன் 18-ஆம் தேதி ஜகமே தந்திரம் நேரடியாக நெட்பிளிக்ஸ் அடித்தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மனதில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படம் இறைவி. இயக்குனர் S.J.சூர்யா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இணைந்து நடித்த இறைவி திரைப்படம்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இறைவி திரைப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். 

இன்றோடு இறைவி திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இதனை நினைவு கூர்ந்து இறைவி திரைப்படத்தின் ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோரை இன்று யூட்யூபில் சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 5 ஆண்டுகள் கடந்தும் தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.