வேதா இல்லம் திறப்பு; ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்

வேதா இல்லம் திறப்பு; ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - Daily news

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டு இன்று திறந்து வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அதிமுகவின் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதற்காக 6 பேர் கொண்ட குழுவை அமைத்தார். பிறகு இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

அதன்படி 2017-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும் என்று அறிவித்தார். ஜெயலலிதா நினைவு இல்லத்தை புதுப்பிக்க ரூ.35,00,000 நிதியும் ஒதுக்கப்பட்டது.


முதல்வர் பழனிசாமி  காலை 10.30 மணிக்கு நினைவு இல்லத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார். அப்போது இல்லத்துக்குள் முதல்வர் , பிற அமைச்சர்கள் முக்கிய அதிகாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 


1970-களில்  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அம்மா இந்த இல்லத்தை வாங்கினார். ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் இருந்து, இதே வீட்டில் தான் வசித்து வந்தார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு, வேதா நிலையத்தைக் கையகப்படுத்த கூடாது, அதனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வாரிசான தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பொதுமக்களை அனுமதிக்ககோரி தமிழக அரசின் முறையீடு நாளை விசாரணைக்கு வருகிறது. 

சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 அடி முழு உருவச்சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 


மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்பிரவரி 24ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். 

Leave a Comment