கவனம்பெற்ற திமுக அரசாங்கத்தின் வட சென்னை வளர்ச்சித் திட்டம்

கவனம்பெற்ற திமுக அரசாங்கத்தின் வட சென்னை வளர்ச்சித் திட்டம் - Daily news

சமூக இடைவெளிகளை அகற்றி சமத்துவத்தை உறுதி செய்து, தமிழ்நாட்டை இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக கொண்டுவரும் திமுக அரசின் பல திட்டங்களை இளைஞர்கள், பெண்கள் ஆதரித்தாலும், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு திட்டங்கள் சமூக ஆர்வலர்களை ஈர்த்துள்ளன. 

திமுக என்றதும் நினைவுக்கு வரும் இரண்டு கோட்பாடுகள் சமூக சமத்துவமும், இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழப் பற்றை முன்னெடுப்பதும்தான். 

திராவிட மொழியான தமிழைத் தூக்கி நிறுத்தவும், இந்தித் திணிப்பை எதிர்க்கவும் அரசியல் கட்சியாகவும், ஆட்சியின் மூலமும் திமுக செய்தவை ஏராளம். 

தன்னை ஒடுக்குகிற மொழியை எதிர்ப்பதில், சமூக நீதியைப் போற்றுவதில் ஒரு இயக்கம் எந்த அளவு உண்மையாக இருக்கிறது என்பதை அளக்கும் அளவுகோல், தன்னைவிட பலவீனமான மொழிகளை, பலவீனமான சமூகங்களை பாதுகாக்க அது எவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பதுதான். 

சென்னை என்று சொன்னாலே நினைவுக்கு வருவது மெரினா கடற்கரை, நவீன உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பெரிய பெரிய கட்டிடங்கள், வேலைவாய்ப்பு போன்றவை தான். 

ஆனால் தென் சென்னை, மத்திய சென்னை போல அல்லாமல் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் வட சென்னையில் இன்னும் கூடுதலான அக்கறை எடுக்கவேண்டிய தேவைகள் உள்ளன. 

தாய்க்கு எல்லாப் பிள்ளைக்களின் மீதும் அன்பு இருந்தாலும், நலிந்த பிள்ளைக்கு அதிக சோறு ஊட்டுவதை போல, தமிழ் நாட்டு அரசு, வட சென்னைக்கு என பிரத்யேக வளர்ச்சி திட்டம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது. 

2024-ம் ஆண்டு தமிழ் நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த ‘வட சென்னை வளர்ச்சி திட்டம்’, மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் சமச்சீர் வளர்ச்சியைக் கொண்டுவரவேண்டும் என்ற திமுக அரசின் அக்கறையைக் காட்டுகிறது. 

வட சென்னைக்காக ₹4,181 கோடி ஒதுக்கியுள்ள திமுக அரசு, அதன் மூலம் ஏரிகளை சீரமைப்பது, பள்ளிகளை மேம்படுத்தி, ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவருவது, அனைவருக்கும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. 

இது சென்னை முழுவதும் சீரான வளர்ச்சியை அடைவதற்கு உதவி செய்யும். சென்னை மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவும். 

சமூக சமத்துவம், மாநிலங்களுக்கிடையில் சமத்துவம், இந்தித் திணிப்பை எதிர்ப்பது என்று பெரிய சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுக்கும் அரசியல் கட்சி திமுக. 

இவையெல்லாம் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் நிற்கும் சமூக நீதிச் செயல்பாடு. இப்படி சமூக நீதி பேசுகிற கட்சிகள் பல இந்தியாவில் உண்டு. 

சமூக நீதிக்காகப் போராடுவதும், அரசியல் செய்வதும் எப்போதும் சவாலான பணி என்றாலும் இந்த சமூக நீதிச் செயல்பாடு மூலம் பலனடையும் பெரிய சமூக குழுக்கள், இப்படி பாடுபடும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்கும். எல்லோராலும் கவனிக்கப்படாத விளிம்புநிலை மக்களை கவனித்து, அவர்கள் பெரிய வாக்கு வங்கியாக இல்லை என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களது பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் அக்கறை செலுத்துவதுதான் உண்மையான சமூக நீதி சிந்தனை. 

திமுகவுக்கு இத்தகைய உண்மையான சமூக நீதி அக்கறை இருப்பதால்தான், ஊனமுற்றோர், மாற்றுப் பாலினத்தவர் ஆகியோர் நலனுக்கான திட்டங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்குகிறது.

Leave a Comment