சுட்ட பொய்யா… சுடாத பொய்யா… சமானியன் பார்வையில் மோடி

சுட்ட பொய்யா… சுடாத பொய்யா… சமானியன் பார்வையில் மோடி - Daily news

தேர்தலைக் கவனித்து வரும் சமானியர் ஒருவரைச் சந்தித்து பேசினோம். அவர் மோடியைப் பற்றி பின்வருமாறு கூறினார். 

வேலைவாய்ப்பு இல்லாமல் 1 லட்சம் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்னது. அனைவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் என்று சொன்னது. இந்தியாவின் 96 லட்சம் ஏக்கர் நிலம் சீனா கைவசம் - மோடியின் தேசப்பற்று நாடகம். 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்தார்கள். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று சொன்னது. கருப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நாடகம் போட்டது. 

தேர்தலுக்காக பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைத்தது. பல ஆயிரம் கோடி ஊழல் செய்த 25 அரசியல்வதிகளை பாஜகவில் இணைத்து இந்தியா ஊழலில் இருந்து விடுதலை பெற்று விட்டது என்று சொன்னது. 

உலக நாடுகள் வரிசையில் போலி செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம். 

எதிர்க்கட்சியின் அறிக்கைகளை கேலி செய்துக்கொண்டும், எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கிக்கொண்டும், அரை நூற்றாண்டிற்கு முன் இறந்த தலைவர்கள் தவறு செய்து விட்டார்கள் என்றும் சம்மந்தமே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். 

வங்கதேசத்தில் போனாலும் பொய், வட தேசத்துக்கு போனாலும் பொய், வெளிநாட்டுக்கு போனாலும் பொய், தமிழ்நாட்டிற்கு வந்தாலும் பொய். எப்பதான் உண்மையை பேசுவீங்க மோடி?

பாஜகவின் சாதனைகள்: 

ஜிஎஸ்டி இழப்பீடு தராமல் கம்பி கட்டியது... 

பல பேரின் உயிரை எடுத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு... 

தேவாலயங்கள் சூறையாடப்பட்டது... 

ஆயிரம் பேரை கொன்று மற்றொரு குஜராத் கலவரம் செய்ததது... 

காஷ்மீரை அபகரித்தது... 

வெளிநாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியரை, இலங்கைத் தமிழர்களை சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்ஏ மூலம் ஒடுக்கப்பட்டது. 

இரயில்வே, விமானத்துறை, விமான நிலையங்களை

அரசு நிறுவனங்களை பெட்ரோலியம் கம்பெனிகளை, சாலைகளை தனியார் மயமாக்கல்...

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற சாதனைகள். தேர்தல் வரும்போது மட்டுமே குறைக்கும் யுத்தி.. 

அதானிக்கும் அம்பானிக்கும் பாடுப்பட்டு அவர்களுக்காக நாள்தோறும் தாங்கள் பாடுபடுவதும்.அவர்களை உலகப் பணக்காரர்களாக ஆக்கியதும்.

ஈடி, அய்டி, சிபிஅய், தேர்தல் ஆணையம் என கூட்டணி வைத்துக் கொண்டு ஊழல்வாதிகளை, அயோக்கியத்தனமான ஆட்களை பாஜக வாஷிங் மெஷின் வைத்து துவைத்து பளிச்சென ஆக்கும் வித்தை… 

தமிழ்நாட்டு சமானிய மக்கள் பார்வையில் மோடி நல்லெண்ணத்தைப் பெற முடியாது போல தெரிகிறது.

Leave a Comment