தமிழ்நாட்டில் பழங்குடிகள் சிறுபான்மை இனங்கள் மொழி பாதுகாப்பு

தமிழ்நாட்டில் பழங்குடிகள் சிறுபான்மை இனங்கள் மொழி பாதுகாப்பு - Daily news

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், தமிழைக் காக்கவும் போராடுவதில் உறுதி காட்டுகின்றனர். அதில் தமிழ் மொழியைப் பேசுவோர் மட்டுமல்லாமல், பல மொழிகளைப் பேசும் சிறுபான்மை இனத்தவர்கள் தமிழ்நாட்டவர்களாகவே உணர்கின்றனர். இது எவ்வாறு நிகழ்ந்தது? 

திமுக ஒரே நேரத்தின் தமிழ் பற்றையும் சிறுபான்மை மொழி இனங்கள் உரிமைகளையும் பாதுகாத்து வளர்த்தது. அதனால் இங்கு தமிழ் மொழிக்காக நடைபெற்ற போராட்டங்களில் சிறுபான்மை இனத்தவர்கள், பழங்குடிகள் எந்த வேறுபாடும் இல்லாமல் கலந்துகொண்டனர். சிறுபான்மை இனங்களின் பள்ளிகள் முதல் பல்வேறு நிறுவங்கள் சிறப்பாக நடக்கின்றன. 

தமிழ்நாட்டில் சிறு இனக் குழுக்களால் பேசப்படும் சௌராஷ்டிரா மொழி முதல் படுகா மொழி வரை சிறுபான்மை மற்றும் தொல்குடி மொழிகளை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசாங்க பட்ஜெட்டில் ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது. 

தோடர், கோத்தர், சோளகர், கனி, நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடிகளின் மொழி வளங்களையும், ஒலி அமைப்பையும் இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவுகிறது. 

சிறுபான்மை இனங்களின், தொல்குடிகளின் மொழி அடையாளத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் மொழி வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் உதவுகின்றது. 

தமிழ் மீதான பற்றுடன், பழங்குடி மொழிகளை, சிறுபான்மை மொழிகளை, பழங்குடி – சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்க திமுக அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முயற்சி, அந்த கட்சி சிறுபான்மை இனங்களின் மீதும், பண்பாடுகள் மீதும் வைத்திருக்கும் மரியாதையையும், அவர்களின் மொழிகளையும் உரிமைகளையும் காக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறையையும் காட்டுகிறது.

Leave a Comment