ஜீவா,அருள்நிதி இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் களத்தில் சந்திப்போம்.தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவங்களின் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.நண்பர்களை மையமாக வைத்து நல்ல காமெடி,ஆக்ஷன் என்று கமர்ஷியலாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளன.தற்போது இந்த படத்தின் ரொமான்டிக் பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.