கணவருடன் மார்க்கெட் சென்ற பெண், 17 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியை அழைத்துக்கொண்டு நேற்று முன் தினம் இரவு, அந்த பகுதியில் இயங்கி வரும் சந்தைக்கு சென்று விட்டு, வீட்டிற்குத் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். 

அப்போது, அந்த வழியாக குடிபோதையில் வந்த ஒரு போதை கும்பல், அந்த தம்பதியினரைத் தாக்கிவிட்டு, கடத்தி உள்ளனர்.

அத்துடன், கொடூரத்தின் உச்சமாக, அந்த பெண்ணின் கணவரை பிணைக்கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்ட அந்த கும்பல், அந்த கணவன் முன்னாடியே, அந்த பெண்ணை நாசம் செய்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்த குடிபோதையில் இருந்த மனித மிருகங்கள், அந்த பெண்ணை வெறித்தனமாக மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, அந்த கணவன் முன்னாடியே, சுமார் 17 பேர், அந்த பெண்ணை வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த தம்பதியினரை அங்கேயே விட்டுவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர்.

இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த பெண், எழவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் பெரும் சித்திரவதைகளை அனுபவித்து உள்ளார்.

மேலும், இது தொடர்பாக போலீசாருக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை உடனடியாக மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன், தாக்குதலுக்கு ஆளான அந்த பெண்ணின் கணவனையும், மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த போதை கும்பல் குறித்து தேடி வருகின்றனர். இந்த வழக்கைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

அத்துடன், இந்த வழக்கில் போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து, விரிவான அறிக்கை அளிக்கும் படி, மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

முக்கியமாக, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இன்னும் 2 மாதங்களில் இந்த வழக்கின் விசாரணையை முடிப்பது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் 
வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஜார்க்கண்ட் டிஜிபிக்கு மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளார். இந்த சம்பவம், அந்த மாநில மக்களிடையே, கடும் பீதியை ஏற்படுத்திய நிலையில், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.