கிச்சனில் சமைத்துக்கொண்டு இருந்த மருமகளிடம், மாமனார் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள பாபு நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஏஎம்சி ஊழியர் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது வீட்டில், அவருடைய 34 வயதான மனைவி, 15 வயதான மகன் ஆகியோர் உள்ளனர்.

இவர்களுடன், ஏஎம்சி ஊழியரின் 65 வயதான தந்தையும் வசித்து வந்தார். 65 வயதான அவர், அந்த வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் இருந்து வந்தார். அவர், அந்த வீட்டில் அதிகமாக டி.வி. பார்க்க மற்றும் சாப்பிட மட்டுமே வருவார் என்றும், மற்ற நேரங்களில் அவர் அந்த அறையை விட்டு வெளியே வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், 65 வயதான அந்த மாமனாருக்கு, 34 வயதான தனது மருமகள் மீது ஒரு கண் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், தனது மருமகள் மீது சபலப்பட்ட அந்த மாமனார், எப்படியாவது அவரை அடைந்து விட வேண்டும் என்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், அந்த பெண்னின் கணவர் கடந்த 12 ஆம் தேதி திங்கள் கிழமை என்று வேலைக்கு சென்று விட்டார். அப்போது, வீட்டில் அவரது மனைவி வீட்டின் சமையல் அறையில் சமைத்துக்கொண்டு இருந்தார். அந்த பெண்ணின் 15 வயதான மகன் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்து உள்ளான்.

அந்த நேரம் பார்த்து, அந்த பெண்ணின் 65 வயதான மாமனார், தனது ரூமிலிருந்து வெளியே வந்து உள்ளார். அப்போது, அவரின் மருமகள் வீட்டு கிச்சனில் சமையல் வேலையாக இருந்ததை நோட்டமிட்ட அவர், அங்கு மெல்ல மெல்ல நடந்து வந்து, மருமகளின் பின்னால் வந்து நின்று உள்ளார். இதனையடுத்து, தனது மருமகளை அந்த மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார் என்று கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மருமகள், சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த மாமனார் “நீ இப்படி எல்லாம் சத்தம் போட்டால், உன்னை கொன்று விடுவேன்” என்று, மருமகளை மிரட்டி உள்ளார். 

அதே நேரத்தில், தாயாரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 15 வயதான மகன், வீட்டின் உள்ளே ஓடி வந்து, தாயாரை தனது தாத்தாவிடமிருந்து காப்பாற்றி உள்ளான். 

இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் தனது மாமனார் மீது, அந்த மருமகள் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.