அகமதாபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்தும் இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95-வது ஆண்டு கூட்டத்தின், துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாறினார்.  


அந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘’ அம்பேத்கர் அமைத்து கொடுத்த பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டியது, நமது கல்வி அமைப்பின் முக்கிய கடமை கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு  துணைபுரிந்தால், அவர்கள் விரும்புவதை அவர்களால் நிச்சயம் நிறைவேற்ற முடியும்.


அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு மூன்று கேள்விகளுக்கான பதிலை ஆராய்ந்து தர வேண்டும். ஒவ்வொரு மாணவரும் எப்படிப்பட்ட திறமையைக் கொண்டவர்கள், அவர்கள் அதிக ஆர்வத்துடன் எதை அடைய விரும்புகிறார்கள், அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று ஆராய்ந்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். 


நாட்டின் ஜனநாயக பாதைக்கு வலுவான அடித்தளத்தை, அண்ணல் அம்பேத்கர் அமைத்து கொடுத்திருக்கிறார். திறன் மிக்க இளைஞர்களின் பங்கு, இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் அதிகமாக உள்ளது. ஆனால் மேலும் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும். இதில் ஆசிரியர்களுக்கு அதிக பங்கு உள்ளது” என்றார்.