திருமணத்தை மீறிய உறவை மனைவி கண்டுபிடித்து எச்சரித்ததால், அதிர்ச்சியடைந்த கணவன் தனது கள்ளக் காதலியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்து உள்ள நல்லாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆறுமுகம் என்பவர், தனது 27 வயதான மனைவி பொம்மியம்மாள் உடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கணவன் ஆறுமுகத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான சிவபாக்கியம் என்ற இளம் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு பழக்கமாகி உள்ளது. 

இதில், 28 வயதான சிவபாக்கியம் திருமணாகி விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான், இளம் பெண் சிவ பாக்கியத்திற்கும், 3 குழந்தைகளின் தந்தை ஆறுமுகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. 

இதனால், அவர்கள் இருவரம் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இப்படியான இவர்களது தனிமையான சந்திப்புகள் பற்றி, ஆறுமுகத்தின் மனைவி பொம்மியம்மாளுக்கு ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வந்திருக்கிறது. 

இதனைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து தனது கணவர் ஆறுமுகத்தைக் கண்டித்து, அவரை எச்சரித்து இருக்கிறார்.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட கணவன் ஆறுமுகம் மற்றும் அவரது காதலி சிவபாக்கியம், ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சிவபாக்கியம் விஷம் குடித்த நிலையில் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். 

அதன் தொடர்ச்சியாக, ஆறுமுகம் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் இரவு வெகு நேரம் ஆகியும் கணவர் ஆறுமுகம் வீட்டிற்கு வராத நிலையில், அக்கம் பக்கத்து உறவினர்களுடன் சேர்ந்து, அவர் மனைவி பொம்மியம்மாள் அந்த பகுதி முழுவதும் கணவரை தேடி அலைந்து உள்ளார். 

அப்போது, ஆறுமுகத்திற்கு சொந்தமான வயல் பகுதியில் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து உடனடியாக அங்குள்ள தோகைமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த சிவபாக்கியம் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.