இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது. மேலும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பவலலைக் கட்டுப்படுத்துவது குறித்து இன்று அலோசனை நடத்துகிறார். 


சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.