பக்கத்து வீட்டில் பெண் ஒருவர் வாங்கிய கடனுக்காக, அந்த பெண்ணின் மகளை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர், தன்னுடைய 16 வயதான மகளோடு வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர், வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டு, அங்கேயே தங்கி இருக்கிறார்.

தற்போது, கடந்த ஒரு ஆண்டாக கொரோனா காரணமாக, பலரும் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், இந்த குடும்பமும் அதற்குப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக, தனது 16 வயதான மகளோடு தனியாக வசித்து வந்த அந்த 39 வயதான பெண், வறுமை காரணமாக, தனது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 

ஆனால், கடன் வாங்கிய அந்த பணத்தை, குறிப்பிட்ட தேதிக்குள் அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால், அந்த பக்கத்து வீட்டுக்காரர் பல முறை அந்த பெண்ணிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதாவது பணம் கடன் கொடுத்த 45 வயதான அந்த நபரும், அவரின் 22 வயதான மகனும் கடன் கொடுத்த பெண்ணிடம் அடிக்கடி கொடுத்த பணத்தைக் கேட்டு, தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

ஆனாலும், கடனாகப் பெற்ற பணத்தை, அந்த பெண்ணால் திருப்ப கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர். இப்பியாக, அந்த பெண்ணிடம் பணத்தை வாங்க முடியாத அவர்கள், அந்த பெண்ணின் மீது கடும் கோவம் அடைந்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடந்த கொடுத்த தந்தை - மகன் இருவரும் குடித்து விட்டு கடுமையான மது போதையில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் வந்து உள்ளனர். 

அப்போது, அந்த 39 வயதான பெண், தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணின் 16 வயதான மகள் மட்டும், வீட்டின் வளாகத்தில் இருந்து உள்ளார். 

அப்போது, அந்த பக்கத்து வீட்டுக் காரர்கள் குடி போதையில் அந்த வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து, அந்த 16 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. 

அதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, சத்தம் போட்டு கூச்சலிட்டு உள்ளார். சிறுமியின் கூச்சல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த சிறுமியை அவர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர். இதனையடுத்து, வீடு திரும்பிய தனது தாயாரிடம் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார முயற்சி பற்றி கண்ணீருடன் கூறி உள்ளார். 

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாயார், தனது மகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பா - மகன் இருவரையும் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.