37 நாளில் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து, 3 முறை விவாகரத்து செய்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தைவான் நாட்டில் தான், இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் பல விதமான விநோதமான சம்பவங்கள் அரங்கேறி அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பது உண்டு. அந்த வகையில், தைவான் 

நாட்டில் கணவன் ஒருவர், தனது மனைவியை வெறும் 37 நாட்களில் 3 முறை விவாகரத்து செய்து, 4 முறை திருமணம் செய்துள்ளதாக ஒரு வித்தியாசமான தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து உள்ளது.

தைவான் நாட்டில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வரும் நபர் ஒருவர்தான், பேசும் பொருளாக மாறி இருக்கிறார்.

இப்படியான நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி “தன்னுடைய திருமணத்துக்காக 8 நாட்கள் விடுப்புக் கேட்டு” அலுவலகத்தில்  விண்ணப்பித்து இருந்தார். 

அதன் படி, அவரது அலுவலகத்தில் அவரின் திருமணத்திற்காக 8 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. அவரும், தனது தன்னுடைய மனைவி உடன் 8 நாட்கள் விடுமுறையைச் செலவழித்து உள்ளார்.

அதனையடுத்து, தன்னுடைய அலுவலகத்தில் வழங்கப்பட்ட 8 நாட்கள் விடுமுறை முடிந்த பிறகு, அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து உள்ளார். இது தொடர்பாகவும், அவர் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. 

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் அதே பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு, தன்னுடைய வங்கியில் விடுமுறை கேட்டு அவர் விண்ணப்பித்து உள்ளார்.

இப்படியாக, அந்த நபர் அவருடைய மனைவியை கிட்டத்தட்ட 3 முறை விவாகரத்து செய்தது, 4 முறை திருமணம் செய்துகொண்டு உள்ளார். இதன் மூலமாக, அவருக்கு 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை மற்றும் அவரது அலுவலகத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் கிடைத்து உள்ளன.

இந்த விசயத்தை, குறிப்பிட்ட அந்த வங்கி நிர்வாகம், நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது கண்டுபிடித்து உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த வங்கி நிர்வாகம், அவருக்கு ஏற்கெனவே ஊதியத்துடன் வழங்கப்பட்ட விடுமுறையை அதிரடியாக ரத்து செய்து செய்தது. 

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நபர், இது தொடர்பாக அந்நாட்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இப்படி ஒரு விநோதமான வழக்கை எதிர்கொண்ட அந்நாட்டு நீதிமன்றம் இதனை எப்படி கையாள்வது என்றும், இது தொடர்பா சட்டம் என்ன சொல்கிறது, சட்டத்தில் எத்தகைய விதிமுறைகள் உள்ளன என்பன குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இதனால், 37 நாளில் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து, 3 முறை விவாகரத்து செய்த கணவன் பற்றி செய்தி, அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.