தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.கொரோனாவுக்கு பிறகு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மாஸ்டர்.

மக்கள்செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மாளவிகா மோஹனன்,கௌரி கிஷான்,சாந்தனு,பூவையார்,அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் OTT தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் தள்ளிப்போனது.இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தளபதி 65 படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடன இயக்குனர் சதிஷ் உள்ளிட்டோரை தனது ஸ்டோரியில் மென்க்ஷன் செய்திருந்தார்.அது அனிருத்தின் ஸ்டுடியோ என்பது அந்த படங்களின் மூலம் தெரிந்தது.

இவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் , விஜய் பிறந்தநாள் நெருங்கிவரும் வேளையில் இவர்கள் இணைந்திருப்பது தளபதி 65 படத்தின் பாடல் டிஸ்கஷனுக்காக இருக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.ஏற்கனவே மாஸ்டர் படத்தில் பாடல் எழுதிய விக்னேஷ் சிவன் இந்த படத்திலும் பாடல் எழுதுவாரா என்பதை பார்க்கலாம் மேலும் ஜூன் 21 நெல்சன் பிறந்தநாள் மற்றும் ஜூன் 22 விஜயின் பிறந்தநாள் எனவே ஏதேனும் ஒரு சர்ப்ரைஸை படக்குழுவிடம் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.