கொரோனா வைரஸ் தாக்குதல் முதல் அலையை விட இரண்டாவது அலையில் மிகுந்த தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதிய படுக்கை வசதியின்மை ஆக்சிஜன் தட்டுப்பாடு என பல இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறது. 

மேலும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என பலரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க தங்கள் உயிரையும் பணயம் வைத்து உழைத்து வருகிறார்கள். 

இந்த கடினமான காலகட்டத்தில் கொரோனா  நிவாரணப் பணிகளுக்காக பலரும் நிவாரண உதவிகளையும் நிதியுதவிகளையும் அரசாங்கத்திற்கு செய்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கும்படி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்.இதனையடுத்து பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்து வந்தனர். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் நிதி உதவி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி  தமிழ் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களின் இந்த பெரும் நிதி உதவியை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

தயாரிப்பாளர் திரு.ஐசரி கணேஷ் அவர்கள் தமிழில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளியான தேவி , நடிகர் ஜெயம்ரவி நடிகர் அரவிந்த்சாமி இணைந்து நடித்த போகன், நடிகர் விஜய் சேதுபதியின் ஜூங்கா நடிகர் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.