உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், தகவல்களை அறிந்து கொள்ளவும், கொரோனா நோயாளிகளின் உதவிக்காகவும் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களை கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு மையம், மாநில அரசால் செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் லக்னோவைச் சேர்ந்த சந்தோஷ் சிங் என்பவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார். இதனால் கொரோனா கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தொலைபேசி வாயிலாக ஒரு பெண் ஊழியர் தொடர்புகொண்டு சில விபரங்கள் கேட்டுள்ளார். 


அப்போது கட்டுப்பாட்டு மையத்தில் பேசிய பெண் ஊழியர் ஒருவர், தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா என்றும், தனிமைப்படுத்தல் தொடர்பான மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து விபரங்களை பூர்த்தி செய்தி விட்டீர்களா என்றும் பல விபரங்கள் கேட்டுள்ளார்.


அந்த பெண் ஊழியர் கேட்ட கேள்விகளுக்கு சந்தோஷ் சிங், எங்களுக்கு எவரும் இதுபற்றி கூறவில்லை என்றும் மருத்துவர்கள் யாரும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது, கேட்க தகவல்கள் எதுவும் சந்தோஷ்க்கு தெரியவில்லை என்றதும் அந்த பெண் ஊழியர் கோபமடைந்து, ‘’போ.. நீ செத்துப் போ, நீ ஒரு படிக்காதவன்’ என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். 


கொரோனா நோயாளியிடம் ‘செத்துப் போ’ என்று அரசின் ஹெல்ப்லைன் ஊழியர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.