தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் நல்ல நடிகராக உருவெடுத்துள்ளவர் அதர்வா.கடைசியாக 2019-ல் இவர் நடித்த 100 படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் நடித்த வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம்,ஒத்தைக்கு ஒத்த,தள்ளிபோகாதே,ருக்குமணி வண்டி வருது உள்ளிட்ட படங்களின் நடித்துள்ளார்.இந்த படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளன.இவற்றை தவிர தனது 100 பட இயக்குனர் சாம் ஆன்டன் புதிய படத்தில் இணைகிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

கொரோனா வைரஸ் உலகத்தையே கடந்த 2019 இறுதி முதல் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.பலரும் இந்த கொடிய நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.பல உயிர்கள் இந்த நோயால் பிரிந்தன.2020-ல் உலகில் பல தொழில்களை ஸ்தம்பிக்க செய்தது இந்த கொரோனா வைரஸ்.

2020 பாதியில் இந்த நோயின் தாக்கம் சற்று குறைந்தது மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.இந்த நேரத்தில் கொரோனாவிற்கு சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இன்னும் எந்த அளவு மருந்து நோயை குணப்படுத்துகிறது என்று தெரியவில்லை.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மீண்டும் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்திலும் ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

சாதாரண மக்களை தாண்டி பல பிரபலங்களும் முக்கிய பிரமுகர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தற்போது இளம் நடிகர் அதர்வா கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தனது வீட்டிலேயே தகுந்த பாதுகாப்போடு சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.