தொலைபேசி உரையாடல்கள்  ஒட்டுக்கேட்கின்றனர் என பா.ஜ.கவினர் மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 


மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு நேரடி போட்டி நிலைவி வருகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வாக்குப்பதிவுகளின் போது கலவரங்கள் நடைப்பெற்றன.


’’மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடியப்போகிறது. மம்தாவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். மே 2-ம் தேதி வீட்டுக்கு சென்றுவிடுவார்” என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வருகின்றனர். மறுபக்கம்,  பாஜவையும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தொடர்நது கடுமையாக தாக்கி பேசி வருகிறார் மம்தா. 


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ விவகாரம் வெளியாகி மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பது,“ பாஜகவினர் எங்களது தொலைபேசியை ஒட்டுக்கேட்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவேன். சில ஏஜென்சிகளுடன் இதுபோன்ற செயல்களில் மத்திய படைகள் ஈடுபட்டுள்ளன என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. பாஜக இதற்கு பின்னால் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அடுத்த சில தினங்களில் அவர்களோ தங்களுக்கும் இதற்கும் எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவார்கள்.” என்றார்.