கொரோனா பாதிக்கப்பட்ட 50 வயது பெண்ணை, மருத்துவ ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியாரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், கொரோனாவுக்கு தீவிரமாகச் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது, கொரோனா நோயாளியான அந்த 50 வயது பெண் மீது, அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், சபலப்பட்டு உள்ளார். 

இதனையடுத்து, நேற்று இரவு கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த பெண்ணை, அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் திடீரென்று அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த ஊழியருடன் போராடி உள்ளார். இந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அந்த பெண் சத்தம் போட்டு கூச்சலிடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்று உள்ளார். பின்னர், தனது சொல்போன் மூலமாக பாதிக்கப்பட்ட அந்த பெண், இது குறித்து தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சம்மந்தப்பட்ட மருத்துவமனை ஊழியரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். 

அப்போது, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், மருத்துவமனை ஊழியரை அதிரடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனை மேஜனர் மற்றும் சக மருத்துவமனை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தின் தொழில் நுட்ப இயக்குநரும், அவரது உதவியாளரும் ரெம்டெசிவிர் மருந்தினை கள்ளச் சந்தையில் விற்றதாகக் கூறி அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். 

மத்திய மாநில அரசுகள் விதித்திருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி, சிலர் பிற இடங்களுக்கு இந்த கொரோனா மருந்தை ஏற்றுமதி செய்து வருவதாக மும்பை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார. இந்த மருத்து கடத்தல் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

அதன்படி, சட்ட விரோதமாக ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்ததாகக் கூறி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தின் தொழில் நுட்ப இயக்குநரும், அவரது உதவியாளரையும் போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.