தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குக் கிடைத்தது. அதிலும் இரண்டாம் சீசன் நிறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தியது. அதன் வெற்றியாளராகக் கனி தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏராளமான மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறார். இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான கனி, இயக்குனர் திருவை மணமுடித்தார்.

குக் வித் கோமாளி, இவருடைய முதல் ரியாலிட்டி ஷோ என்று பலரும் நினைத்து வருகிறார்கள். ஆனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் டிவியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு எனும் நேரடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெருமையும் கனிக்கு உண்டு. மேலும், தற்போது தனக்கென ஓர் யூடியூப் சேனலையும் தொடங்கியிருக்கிறார். 

ஒன்பது வருடங்களுக்கு முன்பே தனிப்பட்ட சேனலை ஆரம்பித்திருந்தாலும், 10 மாதங்களுக்கு முன்பிலிருந்து TheatreD எனும் பெயரில் இருக்கும் இந்த சேனலில் கதைசொல்லியாக மக்களை சந்தித்தார். புராணக் கதைகள் மீது அதிக ஆர்வமுள்ள கனி, பல சிறுகதைகளை அழகான தமிழில் பகிர்ந்து வந்தார். குறிப்பாக பொன்னியின் செல்வன் கதைதான். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று அதில் டைட்டில் வின்னராக மகுடம் சூடினார். காரக்குழம்பு வைப்பதில் கனிக்கு நிகர் யாருமில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு காரக்குழம்பு ஸ்பெஷலிஸ்ட்டாக மாறியுள்ளார். ஃபைனல்ஸில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சிலம்பரசன் பேசுகையில் கூட, கனி வைக்கும் காரக்குழம்பு பற்றி பேசினார்கள். 

இந்நிலையில் கனி மற்றும் திருவின் இல்லத்திற்கு சென்று சர்ப்ரைஸ் செய்துள்ளார் நடிகர் சிலம்பரசன். அவருடன் மஹத், நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் உள்ளனர். 

சிலம்பரசன் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது.