தாயின் கள்ளக் காதல் லீலைகளை தட்டிக்கேட்ட மகளை, தாயே கட்டிப்போட்ட தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வர் நகர் பகுதியில் இருக்கும் கெஞ்சநஹள்ளியில் காவ்யா ஸ்ரீ என்கிற பெண், தனது கணவருடன் வசித்து 
வந்தார். இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

காவ்யா ஸ்ரீயின் கணவர் அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இப்படியான நிலையில், மனைவி காவ்யா ஸ்ரீ கெஞ்சநஹள்ளியில் பகுதியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தார்.

காவ்யா ஸ்ரீயின் 13 வயது மூத்த மகளும், 2 வயது இளைய மகளும், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.

இப்படியான நிலையில், இரு சிறுமிகளின் தாயாரான காவ்யா ஸ்ரீ சொந்தமாக வைத்து நடத்தும் பியூட்டி பார்லர் மூலமாக, அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம், பின்னாளில் கள்ளக் காதலாக மாறி உள்ளதாகத் தெரிகிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில், மனைவியின் கள்ளக் காதல் விவகாரம், அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே பெரும் பிரச்சனை எழுந்த நிலையில், கணவரின் பேச்சை அந்த பெண் கேட்காமல் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, தன் மனைவியை விட்டு பிரிந்து சென்ற அவர் கணவர், தனியாக வசித்து வந்தார். இதனால், இவரின் இரு மகள்களும் மனைவியுடன் வசித்து வந்தனர்.

கணவன் பிரிந்து சென்ற நிலையில், அந்த பெண் முழு சுதந்திரத்தோடு தனது கள்ளக் காதலனிடம் மணிக் கணக்கில் பேசி வந்துள்ளார். 

இப்படியாக, தனது தாயார் அவரின் கள்ளக் காதலன் ரவியோடு அடிக்கடி பேசி வந்த இந்த விஷயம், அவரின் 2 மகளுக்கும் தெரிய வந்தது. இதனால், அவர்கள் தங்களின் தாயை தட்டி கேட்டு உள்ளனர். “நீ செய்வது தவறுமா” என்றும், அவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததோடு, தாயாரிடம் சண்டை போட்டு வந்து உள்ளனர். 

ஆனால், அவரின் தாயார் காவ்யா ஸ்ரீ, இதனைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தனது கள்ளக் காதலனுடன் வீடியோ காலில் தொடர்ந்து பேசி வந்ததோடு, தனது வீட்டிற்கும் அவரை நேரில் வரவழைத்து மணிக்கணக்கில் பேசியும் வந்து உள்ளார். 

அதனால், தாயாரின் கள்ளக் காதல் விசயம் எல்லை மீறிப் போகவே, கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் இளைய மகள், இது பற்றி தனது தாயாரை தட்டிக் கேட்டு உள்ளார். இதில், கோபம் அடைந்த அவரின் தாயார், தனது மகள் என்றும் பார்க்காமல் அவரை ஒரு கயிற்றால் கட்டி போட்டு, அடித்துத் துன்புறுத்தி உள்ளார். 

இதனையடுத்து, கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, இது குறித்து தனது தந்தையிடம் புகார் அளித்தார். ஆனால், அவரோ, “இந்த புகாரை காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு” கூறி உள்ளார். 

இதனையடுத்து, அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் தாயார் காவியா ஸ்ரீயை காவல் நிலையம் வரவழைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.