வெதர்மேன் பீரதீப் ஜானுக்கு கொலை மிரட்டல் ! – இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள் !

வெதர்மேன் பீரதீப் ஜானுக்கு கொலை மிரட்டல் ! – இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள் ! - Daily news

தன்னார்வலராக வானிலையைக் கணித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர் பீரதீப் ஜான். இவர் 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் போது வானிலையை கணித்தது மூலம் இணையத்தில் பிரபலமானார். இன்று தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்  தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான். 

வானிலை ஆய்வு மீதான ஈடுப்பாடால் தன்னிச்சையாக வானிலை அறிக்கையை வெளியிட்டு, மழைக்கும் புயலுக்கும் மக்களை தயார் படுத்திவருபவர். தனக்கு பிடித்த வேலையை மக்களை விழிப்புணர்வு கொடுக்கும் விதமான செயல்பட்டு வரும் பிரதீப் ஜானுக்கு இணையத்தில் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். 

இணையத்தில் பீரதீப் ஜானுக்கு எதிராக சிலர் , “ சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரனைப் பற்றி பீரதீப் அவதூறு பரப்பி வருகிறார். வானிலை சொல்லும் அளவுக்கு அவருக்கு தகுதியில்லை. பிரதீபை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்றும்  “ பீர்தீப் ஒரு ஏமாற்றுகாரர், இவர் போன்ற ஆட்களை விட்டுவைக்க கூடாது. பொதுவெளியில் மக்கள் மத்தியில் அவரை அடித்துக் கொல்ல வேண்டும் “  என்பது போன்று இணையத்தில் பிரதீபுக்கு கொலை மிரட்டல் விடுக்கபட்டு அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியிருக்கிறது.

 
இதுப்போன்ற கமெண்டுகளை ஸ்க்ரீன் ஷாட்டுகள் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பிரதீப் ஜான். அதை தொடர்ந்து , 
” சில கமெண்ட்டுகளில் என்னை கொலை செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.. நான் ஒரு சாதாரண ஆள். நான் எனது பணியை விரும்பி செய்து வருகிறேன். நான் வானிலை ஆய்வு மையத்தை குறிப்பிட்டு எதையும் பேசவில்லை. நான் அதற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறேன். சிலரின் அவதூறு, அநாகரிகமான பேச்சுக்கள் என் இதயத்தை நொறுக்குகிறது என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

நிவர் புயல் பற்றி அவர் சொன்ன எதுவும் நடக்கவில்லை. மேலும் பீரதிப் மீது மத ரீதியாகவும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டனர்.

இதற்கு பிரதீப், “ நான் எந்த மதத்தையும் முன்னிலைப்படுத்தியோ ஆதராவாகவும் நான் பதிவிட்டதில்லை. எந்த மதமாக இருந்தாலும் நான் ஆதரிப்பதும் இல்லை. என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை” என விளக்கமளித்திருக்கிறார். 
இதை தொடர்ந்து வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு ஆதரவாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


என்னுடைய பதிவுகளையும் அறிக்கையும் பின் தொடர வேண்டும் என நான் யாரையும் கேட்டுக்கொள்ள வில்லை. எனது பதிவு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து நகர்ந்து விடுங்கள், என்றியிருக்கிறார் பிரதீப் ஜான்.
விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுசெயாலளர் மற்றும் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ திரு ப்ரதீப் ஜானை மதரீதியில் அவதூறு செய்வதும், அவரைக் கொலைசெய்யவேண்டும் எனப் பதிவிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் ஏற்புடையதல்ல. இதைத் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

”நான் அறிவியலை துஷ்பிரயோகம் செய்வதாகவும், புகழுக்காக இணையத்தில் எழுதிகிறேன் எனவும் கூறுகிறார்கள். ஆனால் நான் இணையத்தில் தொடர்ந்து செயல்படுவதால் என் மன அமைதி, குடும்ப நேரம் போன்ற பல விஷயங்களை இழந்திருக்கிறேன்,’ என்றவர்
மேலும் , ‘ வானிலை ஆய்வு மையப் பணியில் நான் தலையிட்டதில்லை. எனது பேட்டிகளில் கூட வானிலை ஆய்வு மையத்துக்கு ஆதரவளித்து தான் பேசிவந்துள்ளேன்.


வானிலை ஆய்வு மையத்தில் அறிக்கையில் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்றால் 100 தவறுக்கள் கூட என்னால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் எனக்கு என் வரம்பு தெரியும்.  மற்றவறை நோக்கி ஒரு விரலை நீட்டும்போது மூன்று விரல்கள் உங்களை நோக்கி இருப்பதை மறக்க கூடாது என பதிவிட்டுள்ளார்.
மேலும் பீரதீப் ஜான் மீது அவதூறு கருத்துகள் பதிவிட்டவர்கள் மீது வழக்கு தொடர்வது பற்றி யோசித்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துயிருக்கிறார்.
 

Leave a Comment