லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. 

அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் குறித்து தினமும் ரசிகர்கள் கேட்டு வந்தனர். 

தீபாவளி விருந்தாக நேற்று மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மாஸ்டர் டீஸரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாகினர். அதிக பார்வையாளர்களை ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது இந்த டீஸர். திரைப்பிரபலங்களும் டீஸரை கொண்டாடினர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் டீஸர் குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் பட்டாசாக இருக்கு மாஸ்டர் டீஸர். தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நம்ம ராக்ஸ்டார் அனிருத், இயக்குனர் லோகேஷ் எல்லாரும் சிறப்பு என்று பதிவிட்டு, ஒட்டுமொத்த மாஸ்டர் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை கூறினார் சிவகார்த்திகேயன். 

சிவகார்த்திகேயன் கைவசம் டாக்டர் மற்றும் அயலான் திரைப்படங்கள் உள்ளது. டாக்டர் படத்தை SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கிறது. கொரோனாவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு பிறகு சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. நேற்று டாக்டர் படத்தின் புதிய அப்டேட்டுகள் வந்தது. 

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான் படத்தில் நடித்து  வருகிறார் SK. ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.