சூதாட்டத்தில் மனைவியை வைத்து தோற்றதால், வெற்றிபெற்றவர்களுடன் செல்லுமாறு கணவர் ஒருவர், தன் மனைவியை அனுப்பி வைத்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிகார் மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடுமையான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள மொசாஹிடிபூரில் மது பழக்கக்கிற்கு அடிமையான கணவன் ஒருவர், சூதாட்டத்தில் அதிகம் மோகம் கொண்டவராகக் காணப்பட்டு உள்ளார். இதனால், அந்த சூதாட்டில் அதிக அளவிலான பணத்தை இழந்து கொண்டிருந்த அந்த நபர், தன்னிடம் உள்ள எல்லா பணத்தையும் இழந்திருக்கிறார். ஆனாலும், தான் இழந்த பணத்தையெல்லாம் எப்படியாவது போராடிப் பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த நபர் ஒரு கட்டத்தில் தனது மனைவியைப் பந்தயமாக வைத்து விளையாடி உள்ளார். 

ஆனாலும், அந்த நபர் அப்போதும் தோற்று உள்ளார். இப்படி வரிசையாக பந்தயத்தில் தோற்றதால், தன்னுடைய மனைவியை, வெற்றியாளர்களுடன் செல்லுமாறு அந்த கணவன் வற்புறுத்தி அனுப்பி வைத்துள்ளார். 

இதனையடுத்து, அந்த பெற்றிப்பெற்ற நபர் உட்பட அந்த நபரின் சக நண்பர்கள் சேர்ந்து, சூதாட்டத்தில் தோற்றுப்போனவரின் மனைவியை வெறித்தனமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனாலும், அவர்கள் அந்த பெண்ணை அனுப்ப மனம் இல்லாமல் அங்கேயே வைத்து, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதனால், பயந்து போன அந்த பெண், அங்கிருந்து எப்படியோ தப்பித்து, கணவனைத் தேடி செல்லாமல், தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு அந்த பெண் தப்பித்துச் சென்று உள்ளார். 

அங்கு, தனது தாயாரிடம் நடந்த எல்லா விசயத்தையும் கூறி, பாதிக்கப்பட்ட அந்த பெண் அழுதுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், உடனடியாக, இது குறித்து அங்குள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக, சூதாட்டத்தில் தோற்று, வெற்றியாளருடன் தன் மனைவியை அனுப்பி வைத்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் தரும் தகவலை வைத்து, அந்த பாலியல் கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அத்துடன், மனைவியை சூதாட்ட கும்பலுடன் அனுப்பி வைத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனிடையே, சூதாட்டத்தில் விளையாடும் போது, மனைவியை வைத்து தோற்றதால், வெற்றிபெற்றவர்களுடன் செல்லுமாறு கணவர் ஒருவர், தன் மனைவியை அனுப்பி வைத்துள்ள சம்பவம், பிகார் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.