பிரதமர் மோடியின் இளைய சகோதரரும், பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜ்னா அமைப்பின் தேசிய தலைவருமான பிரகலாத் மோடி  மதுரையில் நடைப்பெற்ற  பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டார்.


அப்போது "  2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களை வெற்றி பெற இலக்காகக் கொண்டுள்ளது. ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இந்த நாட்டின் பிரதமராகியுள்ளார் மோடி. அது சாதரண விசயமில்லை. அதனால் தான் ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இரவும் பகலாக செயலாற்றி வருகிறார்.


விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். மோடி என்றுமே விவசாயிகளின் பக்கம் தான்.  மோடி கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள் கீழ்மட்டம் வரை செல்வதில்லை. அப்படி சென்று சேர இன்னும் சில காலம் ஆகும்.


மோடி கொண்டு வரும் அனைத்து நல்ல திட்டங்களையும் மக்களுக்கு கிடைக்க கூடாது என்று  எதிர்க்கட்சிகள் நினைக்கிறார்கள். ஆனால் பிரதமரின் திட்டங்களை ஏழை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்கள் அமைப்பில் 22 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஜன்கல்யாண்கரி யோஜ்னா திட்டம் மற்றும்  40 பிரதான் மந்திரி யோஜ்னா திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் ” என்று கூறினார்.