கொரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு காரணமாக தற்போது திரையுலகில் பல திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரும் இயக்குனருமான நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவான பொன் மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது. 

ஜபக் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஹிதேஷ் ஜபக் மற்றும் நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல் . A.C.முகில் செல்லப்பன் எழுதி இயக்கியுள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க, நடிகை நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மறைந்த இயக்குனர் மகேந்திரன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைதத்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படத்திற்கு கேஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா மிரட்டியிருக்கும்  பொன் மாணிக்கவேல் திரைப்படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது .

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. முன்னதாக பொன்மாணிக்கவேல் திரைப்படத்தின் பாடல்கள் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது  நேரடியாக OTTயில் படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
prabhu deva next movie pon manickavel will release in ott