கள்ளக் காதலனுடன் தனிமையில் இருந்ததை மாமியார் நேரில் பார்த்ததால் கடும் ஆத்திரமடைந்த மருமகள் அவரை உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி அசம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள சிரா தாலுக்கா உஜ்ஜனகுண்டே கிராமத்தை சேர்ந்த 28 வயதான சுதா மணி என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது கணவர் பக்கத்து ஊரில் உள்ள தனியார் நிறுவத்தினல் வேலை பார்த்து வந்தார்.

அத்துடன், சுமாமணி தனது மாமனார், மாமியார் உடன் கூட்டு குடும்பவமாக வசித்து வந்தார்.

இப்படியான நிலையில் தான், அந்த பகுதியில் பல ஊர்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்ய வந்த ஸ்ரீரங்கப்பாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இதனால், துணி வியாபாரியான ஸ்ரீரங்கப்பாவு, சுதா மணியை பார்க்க அடிக்கடி அவர் வீட்டிற்கு வந்துள்ளார். சுதா மணியும், அவரிடம் துணி வாங்குவது போல் மணிக்கணக்கில் பேசி பழகி வந்து உள்ளார். இதனால், அவர்களுக்குள் கள்ளக் காதல் வளர்ந்து உள்ளது.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்த உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கினார்கள். இப்படியாக, கள்ளக் காதலர்கள் இருவரம் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சுதா மணியின் மாமியார் அதனை நேரில் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த மாமியார் மருமகள் சுதா மணியை கடுமையாக கண்டித்து எச்சரித்து உள்ளார். இதில், கடும் ஆத்திரமடைந்த மருமகள் சுதாமணி, “தனது மாமியார் உயிருடன் இருக்கும் வரை, இனி மேலும் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது” என்று ஸ்ரீரங்கப்பாவிடம் கூறி புலம்பியிருக்கிறார். 

அத்துடன், “கள்ளக் காதலுக்கு இடையூராக இருக்கும் மாமியாரை கொன்று விடலாம்” என்றும் ஸ்ரீரங்கப்பாவிடம், சுதமா மணி கூறியிருக்கிறார். அதன் படி, அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு உள்ளனர்.

திட்டமிட்டப்படி, கடந்த 24 ஆம் தேதியன்று சுதா மணியின் வீட்டில் யாரும் இல்லை. அப்போது, தனது கள்ளக் காதலனை வரவழைத்த சுதா மணி, மாமியார் சரோஜம்மா மீது பெட்ரோலை ஊற்றி சுதாமணியும், ஸ்ரீரங்கப்பாவும் சேர்நது அவரை தீ வைத்து எரித்தனர்.

தீ உடலில் பற்றி எரிந்த நிலையில், அலறித்துடித்த அந்த மாமியார், சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்து விட்டார்.

இதையடுத்து, “எனது மாமியார், உடல் நிலை குறைவால் இருந்ததால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவும்” அவர் கூறி நாடகமாடி உள்ளார்.

ஆனால், மனைவி சுதாமணி மீது உயிரிழந்த சரோஜாவின் மருமகன் பிரேம் குமார், அங்குள்ள தாவரகெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மருமகள் சுதா மணியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். முதலில் உண்மைய சொல்ல மருத்த சுதா மணி, அதன் பிறகு போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார். 

அதன் தொடர்ச்சியாக, கள்ளக் காதலர்கள் சுதா மணியும், அவரது கள்ளக் காதலன் ஸ்ரீரங்கப்பாவையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.