கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக கடந்த ஆண்டு முதல் முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்களில் வெளியாகி வந்தன. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.

தொடர்ந்து ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியானது. கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படமும் நேரடியாக நெட்ஃப்லிக்ஸ் OTT தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நேரடியாக தொலைக்காட்சி சேனல்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன .

அந்த வகையில் நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியானது. தற்போது மீண்டும் ஒரு தமிழ் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் சமுத்திரகனி , நடிகர் யோகிபாபு மற்றும் நடிகை ஆத்மியா ராஜன் நடிப்பில் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா எழுதி இயக்கியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. 

வருகிற ஜூலை 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகிறது. தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.