தனது இரு மனைவிகளுடன் உல்லாசமாக இருந்த கணவன், ஆப்களை பயன்படுத்தி அதன் மூலம் மனைவியுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை லைவ் செய்து பணம் சம்பாதித்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அறுவறுப்பான சம்பவம் அரங்கேறி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 10 ஆம் வகுப்பு வரை தான் படித்து உள்ளார். ஆனாலும், தற்போது உள்ள அதி நவீன தொழிற் நுட்பத்தில் நல்ல அறிவை உடையாவதாகத் திகழ்ந்து வந்துள்ளார். 

இவருக்கு மொத்தம் இரு மனைவிகள் உள்ளனர். இவருடைய முதல் மனைவி பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவர். அவர், சமூக வலைத்தளத்தின் மூலம்  நட்பாகி பழகி, முதல் மனைவியைத் திருமணம் செய்துகொண்டு உள்ளார். அதன் பிறகு, அந்த பகுதியில் ஆன்மீக வகுப்புக்கு செல்லும் போது அங்கு ஒரு பெண்ணைக் காதலித்து, அந்த பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு உள்ளார். தனது இரண்டு மனைவிகளுடன், அவர் ஏக போக வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பலரும் வேலை இழந்து தவித்து வரும் நிலையில், தன்னிடம் உள்ள நவீன தொழிற் நுட்ப அறிவை தவறாக பயன்படுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைத்து உள்ளார். அது தொடர்பாகவும் அவர் யோசித்து உள்ளார்.

அப்போது, அந்த நபர் இணையத்தில் பல்வேறு டேட்டிங் ஆப்களில் கணக்கு வைத்துள்ளார். அதன் மூலமாகப் பணம் சம்பாதிக்கும் வழியைக் கண்டறிந்து உள்ளார்.

அதாவது, அவருடைய டேட்டிங் ஆப்பில் அவர் வைத்துள்ள புகைப்படத்தைப் பார்த்து, இவருக்கு லைக் கொடுக்கும் நபருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவார். அது மெனு கார்டு போன்று இருக்கும். இந்த குறுஞ்செய்தியில், “நான் பாலியல் உறவு கொள்வதை நீங்கள் நேரலையில் பார்க்க விருப்பமாக?” என்று, அதில் வாசகம் இடம் பெற்று இருக்கம்.

அந்த வாசகத்திற்குக் கீழ் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அதற்கான கட்டணங்கள் வரையறுத்துக் கொடுத்து, அந்த குறுஞ் செய்தி இருக்கும். 

குறிப்பாக, “முகம் தெரியுமாறு உறவு கொள்வதைப் பார்ப்பதற்கு ஒரு கட்டணமும், முகம் தெரியாமல் உடல் அங்கங்களை மட்டும் பார்த்து ரசிக்க ஒரு கட்டணமும்” நிர்ணயித்து அந்த குறுஞ் செய்தியைச் சகலமானவர்களுக்கும் அவர் அனுப்பி வைத்து வந்து உள்ளார். இப்படியாக, இந்த முறையிலேயே, அந்த இளைஞர், தன்னுடைய 2 மனைவிகளுடனும் பாலியல் உறவு கொள்வதை நேரலையில் ஒளிபரப்பு செய்து, லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்து உள்ளார்.

முதல் மனைவி கணவனின் இந்தச் செயலுக்கு ஒப்புக் கொண்டு அவருக்கு ஏற்றார் போல் செயல்பட்டு வந்து உள்ளார். ஆனால், இரண்டாவது மனைவிக்கு இது பற்றி எதுவும் தெரியாது. ஆனால், ஒரு கட்டத்தில் கணவனின் செயல்பாட்டில் பல மாற்றங்களைக் கண்ட அவரது 2 வது மனைவிக்கு ஒரு கட்டத்தில், இந்த விசயம் தெரிய வந்த போது கடும் அதிர்ச்சியடைந்தார். இதனால், பதறிப் போன அவரின் மனைவி, தன் கணவனிடம் சண்டைக்குச் சென்று உள்ளார். ஆனால், அவரோ, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மனைவிகளை வைத்துத் தான் பணம் சம்பாதிப்பதையே குறியாக வைத்து உள்ளார். 

கணவனின் இந்த செயல்பாடுகளைக் கண்டு பிடித்த அவரின் 2 வது மனைவி, 0அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய கணவன் மீது புகார் ஒன்றை அளித்தார். 

அந்த புகாரில், “தன்னுடைய கணவர், தன்னை தொந்தரவு செய்து பாலியல் உறவில் ஈடுபட்டு அதனை பிறருக்கும் வீடியோவாக பகிர்ந்து உள்ளார்” என்று, குற்றம் சாட்டிருந்தார். அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். போலீசாரின் இந்த  விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. 

அதாவது, குற்றம்சாட்டப்பட்டவரின் படிப்புக்கும், அவரிடம் உள்ள தொழிட் நுட்ப அறிவிக்கும் துளியும் சம்மந்தமே இல்லை என்பதையும் போலீசார் கண்டு பிடித்தனர். வெறும் பத்தாம் வகுப்பு வரை தான் அந்த நபர் படித்து உள்ளார் என்றும், இருப்பினும், மிகுந்த தொழில் நுட்ப அறிவைக் கொண்டு, டேட்டிங்
ஆப்களில் கணக்கு வைத்து, இப்படியான ஒரு பயங்கர மோசடியில் அவர் ஈடுபட்டு உள்ளார் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கியமாக, மனைவியுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டது என்றும், அந்த வீடீயோக்களை டெலிட் செய்ய முடியுமா என்றும், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கணவன் தன் இரு மனைவிகளுடனும் உல்லாசமாக இருந்த தருணங்களை வீடியோவாக நேரலையில் ஒளிபரப்பு செய்த சம்பவம், அந்த மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.