பாலியல் தொழில் செய்ய கணவனின் தங்கையை சொந்த அண்ணியே 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடூர சம்பவத்தில், அந்த 16 வயது சிறுமியை 9 பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா பிரதேசத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி, அனைவரையும் அதிர வைத்து உள்ளது.

ஆந்திரா பிரதேசம் நெல்லூரில் 16 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய திருமணம் ஆன அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமியின் அண்ணன் மனைவியான அண்ணிக்கு, அந்த சிறுமியை பிடிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவரை பழிவாங்க தக்க சமயம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

அத்துடன், பண ஆசை பிடிச்ச அந்த சிறுமியின் அண்ணி, அந்த பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடம் அந்த சிறுமியை வெறும் 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்று உள்ளார். சிறுமியை வாங்கிய விலைக்கு வாங்கிய அந்த பெண், சிறுமியை கட்டாயப்படுத்தி, பாலியல் தொழிலுக்குத் தள்ளி உள்ளார்.

ஆனால், சிறுமி அதற்கு ஒத்துவர மறுத்ததால், சிறுமியை தனி அறையில் அடைத்து வைத்து, அடித்துத் துன்புறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சில நாட்கள் அந்த சிறுமிக்கு சாப்பாடு எதுவும் கொடுக்காமல் துன்புறுத்தி வந்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அந்த பதியைச் சேர்ந்த 9 பேர் மாறி மாறி, அந்த சிறுமியை அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, காமத்திற்கு இரையாக்கி உள்ளனர்.

இதனால், அந்த நகரத்திலிருந்து எப்படியாவது வெளியே வர வேண்டும் என்று, அந்த சிறுமி தகுந்த நேரம் பார்த்து வந்தார். அதன் படி, அந்த சிறுமியை அந்த பகுதியில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக, மர்ம நபர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ரகசியத் தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டை முழுவதுமாக சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டின் ஒரு அறையில் பாதிக்கப்பட்ட அந்த 16 வயதான சிறுமி, மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டார். அப்போது, அந்த சிறுமியை பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது. உடனடியாக, சிறுமியை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அதன் தொடர்ச்சியாக, சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு இடையே, சிறுமியிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமி “தன்னுடைய அண்ணியால் 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது முதல், சிறுமியை வாங்கிய பெண் மற்றும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 9 நபர்கள் பற்றிய முழு தகவலையும் கூறி கதறி அழுள்ளார். 

சிறுமியின் இந்த வாக்கு மூலத்தைப் பதிவு செய்த போலீசார், முதல் கட்டமாக சிறுமியை மற்றொரு பெண்ணுக்கு விற்பனை செய்த அண்ணியையும், அந்த மற்றொரு பெண்ணையும் அதிரடியாக கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த 9 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 11 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமி அங்குள்ள மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு, அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட 11 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதி மக்கள் பீதியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.