உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியை கடத்தி நண்பர்களுடன் சேர்ந்து கணவனே கடந்த 2 நாட்களாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியை கடத்தி நண்பர்களுடன் சேர்ந்து கணவனே கடந்த 2 நாட்களாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ஜஹானாபாத் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு கணவருடன் தனியாக வசித்து வந்த அந்த பெண்ணை, திருமணமான அடுத்த சில நாட்களிலேயே வரதட்சணை கேட்டு, அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். 
 
அத்துடன், அடிக்கடி மனைவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்த கணவன், வரதட்சணை கேட்டு தொடர்ந்து தாக்கி வந்துள்ளார்.

இதனையடுத்து, திருமணம் ஆகி 2 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 2018 ஆம் ஆண்டு, அமுதா கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, வரதட்சணை தொடர்பாக, மனைவியிடம் பிரச்சனை செய்து, மீண்டும் மனைவியை தாக்கியதாகத் தெரிகிறது. அப்போது, அமுதாவிற்கு எதிர்பாரத விதமாகக் கரு கலைந்துள்ளது. இதனையடுத்தும், மனைவியை தொடர்ந்து பல்வேறு விதமாக அவரது கணவர் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால், வாழ்க்கையே வெறுத்துப்போன அமுதா, அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அமுதாவின் கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, விசாரித்தனர். 

மேலும், இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஜூலை 24 ம் தேதி அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது கணவனையும் குடும்ப ஆலோசனை மையத்திற்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை என்ற பெயரில் அமுதாவின் கணவரை அடிக்கடி அழைத்து விசாரணை நடத்தியதால், கோபமடைந்த அவரது கணவன், தனது மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டு கடத்தி உள்ளார். 

இதனையடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தன் மனைவியை கடத்திச் சென்று, தன் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 2 நாட்களாக மனைவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், கூட்டுப் பாலியல் பலாத்காரம் என்ற பெயரில், மனைவியை அவர் கடுமையாகத் துன்புறுத்தித் தாக்கியதாகவும் தெரிகிறது. நண்பர்களுடன் சேர்ந்து வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்த கணவன், அதன் பிறகு அவரை பலவிதமான துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளார். அப்போது, அமுதா பல்வேறு சித்ரவதைகளுக்கு மத்தியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 26 அன்று அமுதாவை, ஜஹானாபாத் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட ஷாஹி ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் அந்தப் பெண்ணை, அந்த கும்பல் தூக்கி எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

வெகு நாட்களாகியும் தன் மகள் தன்னை தொடர்புகொள்ளவில்லை என்றும், தன்னை சந்திக்க வில்லை என்றும் சந்தேகப்பட்ட அமுதாவின் தயார், மகளைத் தேடிச் சென்றுள்ளார். 

மகள் காணாத நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான பெண் ஜூலை 26 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்ட பெண் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மனைவியை கடத்தி நண்பர்களுடன் சேர்ந்து கணவனே கடந்த 2 நாட்களாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்,  உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.