கேரளாவில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அடுத்து உள்ள கோழிக்கோடு உன்னி குளம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்றிரவு அந்த 6 வயது சிறுமி தனது வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது, அவரது பக்கத்து வீட்டுக்காரர் அந்த சிறுமியிடம் வரம்பு மீறியும், அத்து மீறியும் பாலியல் தொல்லை தந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, அந்த பாலியல் வன்கொடுமையால் ஒரு கட்டத்தில் மயங்கி உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, கல்குவாரியில் கூலி வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர், உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த தங்களது மகளை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதனால், பயந்து போன சிறுமியின் பெற்றோர், தனது மகளை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசர அரசமாகக் கொண்டு சென்றனர். 

மருத்துவமனையில் அந்த சிறுமியைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கேட்டறிந்தார். அப்போது, சிறுமி தனக்கு சேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைச் சொல்லத் தெரியாமல் கூறி அழுது உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், இது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தகவல் கூறி உள்ளனர். இதனைக் கெட்டு, சிறுமியின் பெற்றோர் இன்னும் அதிர்ச்சியடைந்து அங்கேயே கதறி அழுதனர்.

மேலும் சிறுமியின் உடல் நிலை மோசமடைந்த காரணத்தால், உயர் சிகிச்சைக்காக அந்த சிறுமி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிறுமிக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், தங்களது 6 வயது மகளுக்கு சேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், குற்றம் சாட்டப்பட்ட நபரை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பக்கத்து வீட்டுக்காரரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் உண்மை என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், மருத்துவமனையில் உள்ள சிறுமியின் உடல் நிலை தற்போது ஓரளவுக்கு முன்னேறி உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்து உள்ள பெண்ணுரிமை செயல்பாட்டாளர் பிரியா பிள்ளை கூறும் போது, “நமது நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில் இதைத் தடுக்க அரசு உடனடியாக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, வலியுறுத்தினார். இந்த சம்பவம், கேரளாவில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.